Skip to main content
A Singapore Government Agency Website How to identify
Official website links end with .gov.sg
Secure websites use HTTPS
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
தமிழ் வளர்ச்சிக்குழு

பயனுள்ள வளங்கள்

பயிற்றுவளங்கள்

Last updated on 25 September 2026

பாலர் பள்ளி மாணவர்களுக்குரிய வளங்கள்

விளையாட்டுவழி வாசித்தல்: பிள்ளைகளுக்கு இன்பமான தமிழ் வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்

தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், தேசிய நூலக வாரியத்தின் (NLB) மூத்த நூலகர், பிள்ளைகளுக்குத் தமிழ் வாசிப்பை இன்பமானதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் மாற்றுவதற்குரிய எளிய விளையாட்டுவழி அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொண்டார். பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவங்களை உருவாக்குவதற்கும் தமிழ் நூல்கள், கதைகள் ஆகியவற்றைப் படிக்க அவர்கள் ஆர்வங்கொள்ள உதவும் நடைமுறை வழிமுறைகளும் இப்பகிர்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தன்னம்பிக்கையுடன் இருமொழி பேசும் பிள்ளைகளை வளர்த்தல்

தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவைச் (CPDD) சேர்ந்த வழிகாட்டு சிறப்பாய்வாளர், பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் இருமொழி பேசுபவர்களாக வளரப் பெற்றோர்கள் எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பிள்ளைகள் தங்கள் அன்றாட வாழ்வில் இரு மொழிகளையும் பொருளுணர்ந்து தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்குரிய நடைமுறை வழிமுறைகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய வளங்கள்

இனிய தமிழை இன்புறக் கற்போம்

தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவைச் (CPDD) சேர்ந்த சிறப்பாய்வாளர்கள், தொடக்கப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடத்திட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பிள்ளைகளின் தமிழ்மொழிக் கற்றலைப் பொருளுள்ளதாகவும் இன்பமானதாகவும் அமைப்பதற்குப் பெற்றோர்கள் கையாளக்கூடிய நடைமுறை உத்திகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.

விளையாட்டுவழி மகிழ்வுறு தமிழ்மொழி கற்றலை வீட்டில் செயற்படுத்துதல்

தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், அனுபவமிக்க ஆசிரியர், விளையாட்டுவழித் தமிழ்மொழி கற்றலுக்குப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஆதரவளிப்பதற்குரிய நடைமுறை சார்ந்த உத்திகளைப் பகிர்ந்துகொண்டார். மகிழ்வூட்டும், அர்த்தமுள்ள விளையாட்டுவழிச் செயற்பாடுகளின் வாயிலாகப் பிள்ளைகள் வீட்டில் இயல்பாகவும் தன்னம்பிக்கையுடனும் தமிழைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்குரிய வழிமுறைகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.

மின்னூல்வழி மின்னிலக்கத் தமிழ்ச் சாகசங்கள்

தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், அனுபவமிக்க தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர்கள், கீழ்த்தொடக்கநிலை மாணவர்கள் சுயமாக உருவாக்கிய தமிழ் மின்னூல்களையும் அவற்றை உருவாக்கிய மாணவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். நிழற்படங்களையும் எளிமையான சொற்றொடர்களையும் பயன்படுத்தி அர்த்தமுள்ள மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளும், தமிழ்மொழி கற்றலில் தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைப்பதற்குரிய நடைமுறை உத்திகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.

உயர்நிலை பள்ளி மாணவர்களுக்குரிய வளங்கள்

இன்பத் தமிழில் இனிய உலா

தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், கல்வி அமைச்சின் சிறப்பாய்வாளரும் பாடக்கலைத்திட்ட வரைவு அதிகாரிகளும் உயர்நிலைத் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்துவதற்கும் தமிழ்மொழிமீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கும் உதவும் உத்திகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.