நல்லாசிரியர் விருது 2024
21 September 2024
நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவைப் பற்றிய விவரங்கள்.

நல்லாசிரியர் விருதைப் பெற்றவர்கள்
ஊடக வெளியீடுகள்:
நிகழ்வின் ஒளிக்காட்சிகள்:
தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு இணைந்து வழங்கும் நல்லாசிரியர் விருது 2024, செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு உள்துறை சட்ட அமைச்சர், திரு கா. சண்முகம் வருகை புரிந்து சிறப்புச் சேர்த்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழாசிரியர்களுக்கு மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன:
வாழ்நாள் சாதனையாளர் விருது
நல்லாசிரியர் விருது பள்ளிப்பிரிவு (தொடக்கநிலை/உயர்நிலை/புகுமுக வகுப்பு)
தேசியக் கல்விக் கழகச் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது
முனைவர் எஸ்.பி.ஜெயராஜதாஸ் பாண்டியன்
நல்லாசிரியர் விருது பள்ளிப்பிரிவு (தொடக்கநிலை/உயர்நிலை/தொடக்கக்கல்லூரி)திருமதி வீரராஜூ தேவிகா (சி.எச்.ஐ.ஜெ தொடக்கப்பள்ளி (தோ பாயோ))
திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன் (செங் காங் தொடக்கப்பள்ளி)
திருவாட்டி சாரதா ராமன் (ஊட்குரோவ் தொடக்கப்பள்ளி)
திருவாட்டி ஜைனுல் பானு ஷாகுல் ஹமீட் (டேயி உயர்நிலைப்பள்ளி)
திருவாட்டி மலர்விழி பெருமாள் (யீசூன் உயர்நிலைப்பள்ளி)
திரு சேது ராமன் ரமேஷ் ராஜா (பூன் லே உயர்நிலைப்பள்ளி)
தேசியக் கல்விக் கழகச் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருதுசெல்வி பாவனா இராஜாராம் (குயின்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி)
திருவாட்டி ஜெம்பு கிருஷ்ணமூர்த்தி நளினி (எங்கர் கிரீன் தொடக்கப்பள்ளி)
