நல்லாசிரியர் விருது 2025
30 August 2025
நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவைப் பற்றிய விவரங்கள்.

நல்லாசிரியர் விருதைப் பெற்றவர்கள்
ஊடக வெளியீடுகள்:

தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவை இணைந்து வழங்கும் 'நல்லாசிரியர் விருது 2025', ஆகஸ்டு 30-ஆம் தேதி அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காலசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் தலைவருமாகிய திரு தினேஷ் வாசு தாஸ் அவர்கள் வருகைபுரிந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழாசிரியர்களுக்கு மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன:
வாழ்நாள் சாதனையாளர் விருது
நல்லாசிரியர் விருது பள்ளிப்பிரிவு (தொடக்கநிலை/உயர்நிலை/புகுமுக வகுப்பு)
தேசியக் கல்விக் கழகச் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது
முனைவர் விஜயராணி கோவிந்தசாமி
நல்லாசிரியர் விருது பள்ளிப்பிரிவு (தொடக்கநிலை/உயர்நிலை/தொடக்கக்கல்லூரி)திருவாட்டி அ. காயத்ரி (ஜெமின் தொடக்கப்பள்ளி)
திருவாட்டி நூர்மனிஷா சர்மணி (வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி)
திரு இராமசாமி ஸ்டாலின் (புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளி)
திரு சரத்குமார் கணசேகரன் (குவீன்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி)
தேசியக் கல்விக் கழகச் சிறந்த தமிழ்ப் பயிற்சியாசிரியர் விருதுதிரு இப்ராஹீம் அஷ்ரப் அலி (யீஷூன் டவுன் உயர்நிலைப்பள்ளி)



