பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய கலந்தாய்வரங்கம் 2024
6 July 2024
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்குரிய கலந்தாய்வரங்கம் பற்றிய விவரங்கள்.
ஊடக வெளியீடுகள்

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஏற்பாட்டில் பாலர் பள்ளித் 'தமிழாசிரியர்களுக்குரிய கலந்தாய்வரங்கம் 2024' ஜூலை மாதம், 6-ஆம் தேதி அன்று இனிதே நடைபெற்றது.
‘அர்த்தமுள்ள விளையாட்டு; வெளிப்புறக் கற்றல் முதலியவற்றின்வழியே தமிழ் கற்றல் கற்பித்தல்’ என்னும் கருப்பொருளில் திருமதி ரதி தேவி அவர்கள் (இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகம், பாடக்கலைத்திட்ட வழிகாட்டு சிறப்பாய்வாளர்) முதன்மையுரை ஆற்றினார்.
மேலும், நான்கு பாலர் பள்ளித் தமிழாசிரியர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்தியா, நியூசிலாந்து, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலிருக்கும் பேச்சாளர்களின் பகிர்வுகள் அனைத்தும் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுத் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் YouTube இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இக்கலந்தாய்வரங்கின் கருப்பொருளையொட்டி அவர்களது உரைகள் அமைந்திருக்கின்றன. இவர்களது பகிர்வுகளை நீங்கள் இங்கே கண்டு பயன்பெறலாம்:
Sharing Session Links
Sharing by | To view |
|---|---|
Mdm Sujatha Gomathinayagam, Facilitator, Professional Development and Learning Early Childhood Education Tatai Angitu, Massey University | |
Prof Sonali Nag, Department of Education, University of Oxford, UK Asst. Prof. Balambigai, N National Institute of Empowerment of Persons with Multiple Disabilities, India | |
Mr Sathish Guptha, Founder & CEO at Magicbox Founder @ Inkmeo Chennai, Tamil Nadu, India | |
Mr Vizhiyan, Tamil Children Literature Writer Tamilnadu, India |
இந்தக் கலந்தாய்வரங்கில் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகத்திலிருந்து மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.



