தமிழோடு இணவோம்: அழகே! தமிழே! 2024
25 May 2024
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான தமிழோடு இணவோம்: அழகே! தமிழே! நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்கள்.
ஊடக வெளியீடுகள்:

Thamizhodu Inaivom: Azhagae! Thamizhae! 2024
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான ‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்ச்சி 2024, மே மாதம் 25-ஆம் தேதி அன்று இனிதே நடந்தேறியது.
புத்தாக்கமிக்க சூழலில் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் உணரச் செய்யவும் பிள்ளைகளையும் பெற்றோர்களையும் வீட்டிலும் வீட்டுக்கு அப்பாலும் தமிழில் பேச ஊக்குவிக்கவும் பெற்றோர், பிள்ளை இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை நான்கிலும் ஐந்திலும் பயிலும் 70 பிள்ளைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சி பிள்ளைகளையும் பெற்றோர்களையும் தமிழ்மொழி சார்ந்த பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தது.




