தமிழோடு இணவோம்: அழகே! தமிழே! 2025
31 May 2025
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான தமிழோடு இணவோம்: அழகே! தமிழே! நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்கள்.
ஊடக வெளியீடுகள்:
Indian Beat - https://www.mewatch.sg/episode/Indian-Beat-S16-E13-544578
Seithi Mediacorp - https://www.facebook.com/share/v/1BhTa9N2ph/
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான ‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்ச்சி 2025, மே மாதம் 31-ஆம் தேதி இனிதே நடந்தேறியது.
வீட்டில் நடைபெறும் அன்றாட உரையாடல்களிலும் வழக்கமான நடவடிக்கைகளிலும் தமிழை இயல்பாகப் பயன்படுத்த உதவும் பயனுள்ள உத்திகளைப் பெற்றோர் அறிந்துகொள்வதற்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை மூன்றிலும் நான்கிலும் பயிலும் பிள்ளைகளும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பிள்ளைகளையும் பெற்றோர்களையும் தமிழ்மொழி சார்ந்த பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த இந்நிகழ்ச்சியை 2024-ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர்கள் வழிநடத்தினார்கள்.




