தமிழோடு இணவோம்: அழகே! தமிழே! 2026
7 March 2026
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான தமிழோடு இணவோம்: அழகே! தமிழே! நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்கள்.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் முத்திரைத் திட்டமான ‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே! 2026' நிகழ்ச்சி, மார்ச்சு 7-ஆம் தேதி அன்று இனிதே நடந்தேறியது.
வீட்டில் நடைபெறும் அன்றாட உரையாடல்களிலும் வழக்கமான நடவடிக்கைகளிலும் தமிழை இயல்பாகப் பயன்படுத்த உதவும் பயனுள்ள உத்திகளைப் பெற்றோர் அறிந்துகொள்வதற்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் பெற்றோர், பிள்ளைகள் எனச் சுமார் 100 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். குறிப்பாக, தொடக்கநிலை மூன்றிலும் நான்கிலும் பயிலும் பிள்ளைகளுக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி தமிழ்மொழி சார்ந்த பலதரப்பட்ட நடவடிக்கைகளில் பிள்ளைகளையும் பெற்றோர்களையும் ஈடுபடச் செய்தது.
2025-ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதியின் அதிகாரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் அங்கங்களை வழிநடத்தினர். அவர்களுடன் இணைந்து தமிழ் முரசு நாளிதழின் செய்தியாசிரியரும் ஓர் அங்கத்தை வழிநடத்திப் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.



