பயனுள்ள பயிற்றுவளங்கள்
உங்களுக்குரிய தமிழ் கற்றல் வளங்கள் — பதிவிறக்கம் செய்யுங்கள்!
பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்குரிய வளங்கள்
பாலர் பள்ளிப் பிள்ளைகளைப் பேணி வளர்த்தல் (NEL) – இளம் பிள்ளைகளின் தமிழ்மொழி கற்றுலுக்கம் எழுத்தறிவுக்கக்மதரவளிப்பதற்கானுரியழிகாட்டி
பாலர் பருவத்தில் இளம் பிள்ளைகள் எவ்வாறு தமிழ்மொழியைக் கற்கிறார்கள் என்பதைப் பெற்றோர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டி உதவுகிறது. பிள்ளைகளுக்குத் தமிழ்மொழிமீது ஆர்வத்தை ஏற்படுத்தி, கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித்திறன்களில் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் கற்பித்தல் அணுகுமுறைகள், கற்றல் அனுபவங்கள், நடவடிக்கைகளை் ஆகியவற்றை இந்த வழிகாட்டியின்வழி அறிந்துகொள்ளலாம்.
கதை நேரம் — தமிழில் கதை சொல்வோம்!
கதை சொல்லத் துணைபுரியும் கதை அட்டைகளும் கதாபாத்திர வெட்டுருக்களும் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றைப் பதிவிறக்கி, உங்கள் பிள்ளைக்குக் கதை சொல்லி மகிழுங்கள்!
கதையை வாசிப்போம்! வீட்டில் வாசித்து மகிழ்வோம்!
இளம் பிள்ளைகளின் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும்வகையில் தமிழ் வளர்ச்சிக் குழு தயாரித்துள்ள இந்த வாசிப்பு வளங்களைப் பதிவிறக்கிப் பயன்படுத்துங்கள். பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து வாசிக்கவும், உரையாடலில் ஈடுபடவும், தமிழை மகிழ்ச்சியுடன் கற்கவும் இவை துணைபுரியும்.
பாலர் முரசு – இளம் வாசகர்களுக்கான தமிழ்வளங்கள்
தமிழ் முரசின் பாலர் முரசு, இளம் வாசகர்களுக்காகப் பல சுவையான தலைப்புகளில் மின்னிதழ்களையும் காணொளிகளையும் வழங்குகிறது. வகுப்பறைக்கு அப்பாலும் தமிழைத் தொடர்ந்து வாசிக்கவும் கேட்கவும் பயன்படுத்தவும் பிள்ளைகளும் பெற்றோரும் இவ்வளங்களை இணைந்து ஆராயலாம்.
விளையாட்டுவழி வாசித்தல்: பிள்ளைகளுக்கு இன்பமான தமிழ் வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்.
தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், தேசிய நூலக வாரியத்தின் (NLB) மூத்த நூலகர், பிள்ளைகளுக்குத் தமிழ் வாசிப்பை இன்பமானதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் மாற்றுவதற்குரிய எளிய விளையாட்டுவழி அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொண்டார். பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவங்களை உருவாக்குவதற்கும் தமிழ் நூல்கள், கதைகள் ஆகியவற்றைப் படிக்க அவர்கள் ஆர்வங்கொள்ள உதவும் நடைமுறை வழிமுறைகளும் இப்பகிர்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தன்னம்பிக்கையுடன் இருமொழி பேசும் பிள்ளைகளை வளர்த்தல்
தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவைச் (CPDD) சேர்ந்த வழிகாட்டு சிறப்பாய்வாளர், பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் இருமொழி பேசுபவர்களாக வளரப் பெற்றோர்கள் எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பிள்ளைகள் தங்கள் அன்றாட வாழ்வில் இரு மொழிகளையும் பொருளுணர்ந்து தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்குரிய நடைமுறை வழிமுறைகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குரிய வளங்கள்
தொடக்கநிலைத் தமிழ்மொழிப் பாடத்திட்டம் 2024
தொடக்கநிலையில் தமிழ்மொழிக் கற்றல் நோக்கங்கள், பாட உள்ளடக்கம், மொழித்திறன்கள், மதிப்பீட்டுத் தேவைகள் ஆகியவற்றை இப்பாடத்திட்டம் விளக்குகிறது. மாணவர்களின் தமிழ்மொழித் தேர்ச்சியை வளர்க்கவும் பொருளுள்ள கற்றல் அனுபவங்களை ஆசிரியர்கள் திட்டமிடவும் இது வழிகாட்டுகிறது.
தமிழ்முரசுப் பகிர்வு — புதிய அம்சங்கள்: தமிழ் முரசு இணையத்தளமும் செயலியும்
‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே! 2026’ நிகழ்வில் பகிரப்பட்ட இந்தப் படவில்லைகள், மாணவர் முரசு, பாலர் முரசின் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.
வீட்டில் தமிழில் பேசலாம் — பெற்றோருக்கு உதவும் எளிய உத்திகள்
‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்வில் பகிரப்பட்ட, வீட்டில் பிள்ளைகளைத் தமிழில் பேச ஊக்குவிக்கப் பெற்றோர் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய நடைமுறை உத்திகளும் ஆலோசனைகளும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
விளையாடுவோம்! பேசுவோம்! — ஆசிரியர்கள் பகிரும் உத்திகள்
‘தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே!’ நிகழ்வில், விளையாட்டுகள், செயல்பாடுகள்வழி வீட்டில் பிள்ளைகளைத் தமிழில் பேச ஊக்குவிக்க உதவும் நடைமுறை உத்திகளையும் ஆலோசனைகளையும் ஆசிரியர்கள் பெற்றோருடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மாணவர் முரசு – மாணவர்களுக்குரிய வாசிப்பு வளங்கள்
தமிழ் முரசின் மாணவர் முரசு, மாணவர்களுக்கு ஏற்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ்க் கட்டுரைகளையும் செய்திகளையும் வழங்குகிறது. நடப்பு விவகாரங்கள், பண்பாடு, கல்வி போன்ற சுவையான தலைப்புகளை வாசிப்பதன்மூலம் மாணவர்கள் தமிழில் வாசிக்கும் திறனையும் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம். மாணவர் முரசின் அண்மைய மின்னிதழையும் இப்பக்கத்தில் படிக்கலாம்.
இனிய தமிழை இன்புறக் கற்போம்
தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவைச் (CPDD) சேர்ந்த சிறப்பாய்வாளர்கள், தொடக்கப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடத்திட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பிள்ளைகளின் தமிழ்மொழிக் கற்றலைப் பொருளுள்ளதாகவும் இன்பமானதாகவும் அமைப்பதற்குப் பெற்றோர்கள் கையாளக்கூடிய நடைமுறை உத்திகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.
விளையாட்டுவழி மகிழ்வுறு தமிழ்மொழி கற்றலை வீட்டில் செயற்படுத்துதல்
தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், அனுபவமிக்க ஆசிரியர், விளையாட்டுவழித் தமிழ்மொழி கற்றலுக்குப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஆதரவளிப்பதற்குரிய நடைமுறை சார்ந்த உத்திகளைப் பகிர்ந்துகொண்டார். மகிழ்வூட்டும், அர்த்தமுள்ள விளையாட்டுவழிச் செயற்பாடுகளின் வாயிலாகப் பிள்ளைகள் வீட்டில் இயல்பாகவும் தன்னம்பிக்கையுடனும் தமிழைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்குரிய வழிமுறைகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.
மின்னூல்வழி மின்னிலக்கத் தமிழ்ச் சாகசங்கள்
தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர்கள், கீழ்த்தொடக்கநிலை மாணவர்கள் சுயமாக உருவாக்கிய தமிழ் மின்னூல்களையும் அவற்றை உருவாக்கிய மாணவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். நிழற்படங்களையும் எளிமையான சொற்றொடர்களையும் பயன்படுத்தி அர்த்தமுள்ள மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளும், தமிழ்மொழி கற்றலில் தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் ஒருங்கிணைப்பதற்குரிய நடைமுறை உத்திகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.
உயர்நிலை & பல்கலைக்கழகப் புகுமுகுநிலை மாணவர்களுக்குரிய வளங்கள்
உயர்நிலைத் தாய்மொழிப் பாடத்திட்டம் 2021
உயர்நிலையில் G1, G2, G3, உயர் தாய்மொழி ஆகியவற்றுக்குரிய பாடத்திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது. மாணவர்கள் தாய்மொழியைத் தன்னம்பிக்கையுடன் திறம்படப் பயன்படுத்த உதவும் கற்றல் நோக்கங்கள், மொழித்திறன்கள், பண்பாட்டுக் கற்றல், கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு அணுகுமுறைகள் குறித்த வழிகாட்டுதலை இது வழங்குகிறது.
இன்பத் தமிழில் இனிய உலா
தாய்மொழிகளின் கருத்தரங்கில் (MTLS) இடம்பெற்ற இப்பகிர்வில், கல்வி அமைச்சின் சிறப்பாய்வாளரும் பாடக்கலைத்திட்ட வரைவு அதிகாரிகளும் உயர்நிலைத் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்துவதற்கும் தமிழ்மொழிமீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கும் உதவும் உத்திகளும் இப்பகிர்வில் எடுத்துரைக்கப்பட்டன.
தொடக்கக் கல்லூரி - H1 தமிழ்மொழி, தமிழ்மொழி B பாடத்திட்டம்
H1 தமிழ்மொழி, தமிழ்மொழி B பாடங்களுக்குரிய கற்றல் நோக்கங்கள், பாட உள்ளடக்கம், திறன்கள், மதிப்பீட்டுத் தேவைகள் குறித்த கண்ணோட்டத்தை இப்பாடத்திட்டம் வழங்குகிறது. பாடத்திட்டத்தையும் பாடத்தின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது பயனுள்ள வழிகாட்டியாக அமைகிறது.
மாணவர்களின் படைப்புகள் – மின்னூல்கள்
‘நானும் ஒரு படைப்பாளி’ திட்டத்தின் படைப்பாக்க எழுத்துத்திறன் பயிலரங்கில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்ச் சிறுகதைகளைப் படைத்தனர். வெற்றிபெற்ற கதைகள், வாசிப்பில் சிரமம் எதிர்நோக்குவோருக்கு உதவும் வகையில் சித்திரங்கள், இசை, ஒலிவழி வாசிப்பு ஆகியவற்றுடன்கூடிய இருவழித்தொடர்பு மின்னூல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
மின்னூல்கள்
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குச் சுவையான தமிழ்க் கதைகள், ஒலிவழி வாசிப்பு, ஆர்வமூட்டும் சித்திரங்கள் ஆகியவை இம்மின்னூல்களில் இடம்பெற்றுள்ளன. ஒலிவழி வாசிப்பு, மாணவர்கள் கதையை எளிதாகப் பின்தொடர உதவி செய்து இனிமையான தமிழ் வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது.
ஒலிப் புத்தகங்கள் - கதை நேரம்
‘கதை நேரம்’ இளம் வாசகர்களுக்காகச் சுவையான தமிழ் ஒலிப் புத்தகங்களை வழங்குகிறது. பல்வேறு மின்னூல்களிலிருந்து விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து, தமிழ்க் கதைகளை வாசித்தும் கேட்டும் மகிழலாம்.
சித்திரக்கதைகள்
'கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்' குழுவினர் 'கதை நேரம்’ என்னும் தலைப்பில் மாணவர்களுக்காகச் சுவையான தமிழ்ச் சித்திரக்கதைகளைப் படைத்துள்ளது. வண்ணமயமான சித்திரங்களும் சுவாரசியமான கதைக்களங்களும் வாசகர்கள் தமிழ்க் கதைகளை மகிழ்ச்சியுடன் படித்து, வாசிப்பில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன.
இளையர் முரசு – இளம் வாசகர்களுக்குத் தமிழ் வளங்கள்
தமிழ் முரசின் ‘இளையர் முரசு’, இளம் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு தலைப்புகளில் சுவையான தமிழ் உள்ளடக்க வளங்களை வழங்குகிறது. இவ்வளங்கள் இளையர்களின் வாசிப்புப் பழக்கத்தையும் தமிழ்மொழித் திறனையும் வளர்ப்பதோடு, வகுப்பறைக்கு அப்பாலும் தமிழோடு தொடர்ந்து இணைந்திருக்கத் துணைபுரிகின்றன.
